தமிழ்நாடு காவல்துறையில் மாநில அளவில் மண்டலங்களுக்கு இடையிலான 61 -ஆவது காவலர் தடகள போட்டியில் புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் 4 பேர் பல்வேறு பதக்கங்களை வென்றனர்.
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிந்தும் வரும் காவலர்கள் பங்குபெறும் மாநில அளவில் மண்டலத்திற்கிடையேயான 61 -ஆவது தமிழ்நாடு காவலர் தடகள் போட்டி 2021-2022 ஆனது சென்னை பெருநகர காவல் துறையால் நடத்தப்பட்டது. இதில் Swimming, Cross Country, Obstacles, Power lifting, Weight lifting. 5000 mts, Kho-Kho, Boxing, Volley Ball, Wrestling மற்றும் Cycling ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையை சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள். பாக்கியராஜ்.,தங்கமலர், ஆரோக்கிய யுவராணி மற்றும் காமாட்சி ஆகிய 4 பேர் கலந்து கொண்டு வலுதூக்கும் போட்டியில் முதல் இடம், பாக்சிங் இரண்டாம் இடம், பளுதாக்குதலில் இரண்டாம் இடம் மற்றும் நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இவர்களை (12.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தார்