Close
டிசம்பர் 3, 2024 5:13 மணி

புதுக்கோட்டையில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

pudukkottai

புதுக்கோட்டையில் நடைபெற்ற காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகோப்பை வழங்குகிறார், மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை – பொதுமக்கள்  நல்லுறவு  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானம், மாவட்ட விளையாட்டு மைதானம், உள்ளிட்ட பல்வேறு மைதானங்களில் கிரிக்கெட், இறகுப்பந்து , கைப்பந்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்(26.3.2022) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இந்த போட்டிகளில் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையம், திருக்கோகர்ணம், நகர காவல் நிலையம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருமயம், உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த  பொதுமக்களும் இணைந்து  பங்கேற்றனர்.

புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன், டிஎஸ்பி லில்லி கிரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினர்.

பின்னர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேசியதாவது:  காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காகவும்  காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவைப் பேணும் விதத்திலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே மொபைல் போன், லேப்டாப்  போன்ற மின்னணு சாதனங்களின்  விளையாட்டுகளில்  மூழ்கிக்கிடக்கின்றனர் .

இதனால், மனதும் உடல் ஆரோக்கியமும் கெட்டுப் போகும் நிலை அதிகரித்துள்ளது. எனவே காவல் துறையைச் சார்ந்தவர்களின்  குழந்தைகளுக்கும் வெளிப்புற விளையாட்டினை கற்றுக்கொடுத்து வீடுகளுக்குள் முடங்கிவிடாத சூழ்நிலைை ஏற்படுத்த வேண்டும் என்றார் எஸ்பி. நிஷாபார்த்திபன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top