Close
நவம்பர் 21, 2024 8:49 மணி

புதுக்கோட்டை விளையாட்டரங்கில் ஏப். 20 ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டிகள்

புதுக்கோட்டை

ஏப்.20-ல் புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தட கள விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் 2021-22      மாவட்ட விளையாட்டரங்கத்தில்  20.04.2022 (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

விளையாட்டுத் துறையில் மாற்றுதிறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட அளவில் மாற்றுதிறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வருகின்ற 20.04.2022  புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகொணர வேண்டும். இப்போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. குறிப்பிட்ட பிரிவில் விளையாட கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

தடகள போட்டிகள் கை, கால் ஊனமுற்றோருக்கான, 50 மீ ஓட்டப் போட்டி கால் ஊனமுற்றோருக்கும், 100 மீ ஓட்டப் போட்டி கை ஊனமுற்றோர்க்கும், 50 மீ ஓட்டப் போட்டி குள்ளமானோருக்கும், குண்டு எறிதல் போட்டி கால் ஊனமுற்றோர்க்கும், 100 மீ சக்கர நாற்காலி போட்டி இரு கால்களும் ஊனமுற்றோர்க்கும் நடைபெறவுள்ளது.

பார்வையற்றோர்களுக்கு 50 மீ ஓட்டப் போட்டி முற்றிலும் பார்வையற்றோருக்கும், 100 மீ ஓட்டப் போட்டி மிக குறைந்த பார்வையற்றோருக்கும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டி மிகக் குறைந்த பார்வையற்றோருக்கும், Soft Ball மிக குறைந்த பார்வையற்றோருக்கும், குண்டு எறிதல் போட்டி முற்றிலும் பார்வையற்றோருக்கும் நடத்தப்படவுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு 50மீ ஓட்டப் போட்டி புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இருக்காதவருக்கும், 100மீ ஓட்டப் போட்டி புத்தி சுவாதினம் தன்மை நல்ல நிலையில் இருப்பவருக்கும், Soft Ball எறிதல் புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இருக்காதவருக்கும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டி புத்தி சுவாதினம் தன்மை முற்றிலும் இருக்காதவருக்கும், குண்டு எறிதல் போட்டி புத்தி சுவாதினம் தன்மை தன்மை நல்ல நிலையில் இருப்பவருக்கும், நடத்தப்படவுள்ளது.

புதுக்கோட்டை
(பைல் படம்)

காது கேளாதோருக்கு 100மீ ஓட்டம், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400மீ ஓட்டம் ஆகியப் போட்டி கள் நடத்தப்பட வுள்ளது.

குழு விளையாட்டுப் போட்டிகளான கை, கால் ஊனமுற்றோர்க்கு இறகுபந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஓர் அணிக்கு 5 வீரர்-வீராங்கனைகளுக்கும், மேசைப்பந்து அணிக்கு 2 வீரர்-வீராங்கனைகளும், பார்வையற்றோர்க்கான அடாப்டட் வாலிபால் அணிக்கு 7 வீரர்-வீராங்கனைகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து போட்டியும் அணிக்கு 7 வீரர்-வீராங்கனைகளும், காது கேளாதோருக்கு கபாடி போட்டிக்கு 7 வீரர்-வீராங்கனைகளும் கலந்து கொள்ளலாம்.

மாற்றுதிறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டு திறனை வெளிபடுத்தலாம் . மேற்படி போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று- மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் வழங்கப்பட்ட சான்று அவசியம் கொண்டு வருதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top