Close
ஏப்ரல் 4, 2025 11:06 மணி

மே.7 ல் புதுக்கோட்டையில் மாவட்ட வளைகோல் பந்து போட்டிகள்

புதுக்கோட்டை

மே.7-ல் புதுக்கோட்டையில் வளைகோல் பந்து போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கு புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் விளையாட்டுப் போட்டிகள் 07.05.2022 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொள்ள வயது வரம்பு கிடையாது. முதலிடம் பெறும் அணிவீரர்களுக்கு பரிசுத் தொகை யாக தலா ரூ.100, இரண்டாமிடம் பெறும் அணி வீரர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.50, சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இதில் கலந்துகொள்ளும் அணிகள் 07.05.2022 அன்று காலை 8.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வருதல் வேண்டும். இதில் வெற்றி பெறும் ஆடவர் அணி மண்டல அளவிலான வளைகோல்பந்து விளையாட்டுப் போட்டியில் தவறாது கலந்து கொள்ள  வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top