தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி (6.5.2022) தொடங்கியது.
புதுக்கோட்டைநகர் மன்றத்தில் தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலானஆண் ,பெண்சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டி(மே. 6, 7, 8 ) மூன்று நாட்கள் நடைபெறு கிறது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் நடைபெறும் குத்துச் சண்டை போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குத்துச் சண்டை வீரர்கள் கலந்து கொண் டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்தவிதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை. தற்போது வைரஸ் தொற்று தாக்கம் குறைந்து விட்ட நிலையில் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் குத்துச்சண்டை போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகர மன்ற வளாகத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலான சப்-ஜூனியர் குத்துச்சண்டை போட்டி 2022-23 -ஆம் ஆண்டுக்கான குத்துச்சண்டை போட்டி தொடங்கியது.
இந்த குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நீலகிரி, விருதுநகர் ,சேலம் ,ஈரோடு மதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த குத்துச்சண்டை போட்டியில் மொத்தம் 28 உடல் எடை பிரிவில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் குத்துச்சண்டை வீரர்கள் மே 20 முதல் 26 தேதி வரை பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடத்தப்படும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகளை தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன்.பாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டைக் கழகத் தலைவர் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார், செயலாளர் கார்த்திகேயன் குழுவினர் செய்துள்ளனர்,