புதுக்கோட்டைநகர் மன்றத்தில் தமிழ் நாடு குத்துச் சண்டை கழகம் நடத்தும் மாநில அளவிலான ஆடவர், மகளிர் சப் ஜுனியர் குத்துசண்டைபோட்டிகளின் இரண்டாம் நாள் போட்டியினை மாவட்ட குத்துச்சண்டைக் கழகத் தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார். டாக்டர் எஸ். ராம்தாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நீலகிரி, விருதுநகர் ,சேலம் ,ஈரோடு மதுரை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குத்துச்சண்டை வீரர்கள் 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இந்த குத்துச்சண்டை போட்டியில் மொத்தம் 28 வகையான எடை பிரிவில் போட்டி நடைபெறுகிறது. இரண்டாம் நாள் போட்டியில் மகளிர் பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்,
இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் குத்துச்சண்டை வீரர்கள் மே 20 முதல் 26 தேதி வரை பாக்ஸிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடத்தப்படும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் சித்திராதேவி அஞ்சலிதேவி சதாசிவம், நமச்சிவயம், பாண்டியன் செயலாளர் கார்த்திகேயன் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.