Close
நவம்பர் 22, 2024 2:37 காலை

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு ஜூன்10 க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

முதலமைச்சர் இளைஞர் விருது

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு வரும்  10.06.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டைஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்ஃஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1  இலட்சம் வீதம், ரூ.10,000 – மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது.

விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளை யாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்பித்தல் வேண்டும். இது தவிர விளையாட்டுப் போட்டி களை நடத்தும் ஒரு நடத்துநர் -ஒரு நிர்வாகி -ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ10.00 இலட்சத்திற்கு அதிகமாக நன்கொடை அளித்தவர்)ஃ ஒரு ஆட்ட நடுவர் – நடுவர் – நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கப் படுகிறது.

இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000 – க்கு மிகாமல் ஒரு தங்க பதக்கமும், ஒரு பாராட்டு சான்றிதழும் வழங்கப் படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்திட்டத்தின்படி, 2021-2022 -ஆம் ஆண்டிற்கான காலம் (01.04.2018 முதல் 31.03.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு கழகம்- மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்-முதன்மை கல்வி அலுவலர்-முதன்மை உடற்கல்வி ஆய்வர்(ஆடவர்-மகளிர்) மூலமாகவும், விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர்-ஒரு நிர்வாகி-ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர்-நடுவர்-நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற் காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.

இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலை தொடர் புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.

இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது. ஒருவர் காலமாகும் பட்சத்திலும்,  இவ்விருது வழங் கப்படும். விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையா ட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும்.

விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் தங்களது சான்றிதழ் களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல், ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள் மற்றும் உலக வாகையர் போட்டிகள்(4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டு தோறும்), மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள்.

அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையே யான போட்டிகள் கருத்தில் கொள்ளப் படாது. முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்.

பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்களில் பதக்கமும் அதாவது உலக் கோப்பை, தெற்காசிய தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும்.

போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும்.
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் (www.sdat.tn.gov.in <http://www.sdat.tn.gov.in>) மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல், ‘முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்” என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு 10.06.2022 –க்குள், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்;டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600003 -என்ற முகவரிக்கு உரிய வழிமுறையாக சமர்பிக்க வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top