Close
நவம்பர் 22, 2024 3:12 காலை

புதுக்கோட்டையில்   44  வது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மவுன்ட்சீயோன் பள்ளியில் நடந்த செஸ் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில்   44  -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மவுண்ட் சியோன் மெட்ரிக். பள்ளியில் 44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக 15 வயதிற்கு உள்பட்ட சிறுவர்-சிறுமியருக்கான சதுரங்க போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

போட்டியினை மவுண்ட் சியோன் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஜோனத்தன் ஜெயபரதன் தொடங்கி வைத்தார்.  இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சதுரங்க துணைத் தலைவர் அடைக்கலவன் தலைமை வகித்தார்.  செயலாளர் பேராசிரியர் கணேசன் வரவேற்றார். சதுரங்க பயிற்சியாளர் சியாம் சுந்தர் முன்னிலை வைத்தார்.

புதுக்கோட்டை

போட்டியில் வெற்றி பெற்ற முதல் 5 இடம் பிடித்த மாணவிகள் நவசக்தி, ராஷ்மிகா, ஸ்ரீ கவுசல்யா, தாமரைச்செல்வி, சன்மதி, ஸ்ரீநிதி செல்லப்பா முதல் 5 இடம் பிடித்த மாணவர்கள் கமலேஷ்வர் , விஸ்வநாதன் , சஞ்சித், ஆரீஸ் இம்ரான், நவின் , ரோஹித் தங்கம் ஆகியோருக்கு  சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா விருதுகள் நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் ஒலிம்பியாட்   சதுரங்க போட்டியை பார்த்து ரசிப்பதற்கு   தேர்வு செய்யப்பட்ட நவசக்தி, கமலேஷ்வர்  ஆகிய இரண்டு பேரும் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில்   கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர்  சதுரங்க பயிற்சியாளர் சியாம் சுந்தர் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளை வாழ்த்தி பேசினார்.

நிகழ்வில் சதுரங்கப் போட்டி நிர்வாகிகள் பயிற்சியாளர்கள் ஜெயராமன் அங்கப்பன் புதுகை செல்வம் ஸ்ரீதர், பார்த்திபன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வினிதாசெல்வம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top