Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

தேசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளித்த நண்பர்கள்

புதுக்கோட்டை

தேசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாலதியை தோளில் தூக்கி கொண்டாடிய தோழிகள்

சென்னையில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவி மாலதிக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குத்துச்சண்டை வீரர்கள் தோளில் சுமந்து  ஊர்வலமாக சென்று கேக் வெட்டி பட்டாசு வெடித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில்  ஜூலை 5 முதல் 11 -ஆம் தேதி வரை தேசிய இளையோர் பெண்கள் பிரிவினருக்கான  குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது

இந்த குத்துச்சண்டை போட்டியில் போட்டியில் ஹரியானா, பஞ்சாப், மணிப்பூர், டெல்லி, சண்டிகர், உள்ளிட்ட 32 மாநிலங்களில் இருந்து குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர்.  இதில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அல்டியஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் குத்து சண்டை வீராங்கனைகள் மூன்று பேர்  கலந்து கொண்டனர்.

 57, 60 எடைப்பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை அல்டியஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவி மாலதி, பஞ்சாப் வீராங்கனையை தோற்கடித்து தமிழ்நாட்டுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

மேலும் 32 மாநிலங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீராங்கனைகள் கலந்து கொண்ட போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாலதி தமிழ்நாட்டிற்காக வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்து மாவட்டத்துக்கும் மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  நேற்று நடந்த நிகழ்வில், வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மாலதியை   சக குத்துச்சண்டை வீராங்கனைகள் தோளில் சுமந்து ஊர்வலமாக தூக்கிவந்து ல் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும் வெற்றி பெற்ற மாணவிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் மற்றும் பயிற்றுநர்கள் செந்தில் பார்த்திபன், காதர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top