Close
நவம்பர் 22, 2024 11:56 காலை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

புதுக்கோட்டை

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28.08.2022 முதல் 09.09.2022 வரை வேளாங்கண்ணிக்கு இரவு,பகல் நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்ட   தகவல்:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2022 -ஐ முன்னிட்டு 28.08.2022 முதல் 09.09.2022 -வரை சென்னை, திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும், அதேபோன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் 28.08.2022 முதல் 09.09.2022 வரை இரவு-பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) சார்பாக இயக்கப்பட உள்ளது.

மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.

எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அதில்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top