Close
நவம்பர் 22, 2024 10:13 காலை

சென்னையில் 10-வது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி..

புதுக்கோட்டை

இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியை (சாரக்ஸ்) சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்த பாதுகாப்பு அமைச்சக செயலாளர் டாக்டர் அஜய்குமார்.

இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியை (சாரக்ஸ்) சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்த பாதுகாப்பு அமைச்சக செயலாளர் டாக்டர் அஜய்குமார்.

 சென்னையில் 10-ஆவது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியை (சாரக்ஸ்) பாதுகாப்பு அமைச்சக செயலாளர் டாக்டர் அஜய்குமார் சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

 இந்தியக் கடலோரக் காவல் படையின் கீழ் இயங்கி வரும் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வாரியத்தின் (NMSARB) சார்பில் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி முகாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியக் கடலோரப் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை சென்னையில் தொடங்கியது. பயிற்சி முகாமை இந்தியக் கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரல் வி.எஸ்.பதானியா முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சக செயலர் டாக்டர் அஜய் குமார் தொடங்கி வைத்தார்.

“கடல் பயணிகளின் பாதுகாப்பை நோக்கிய திறனைக் கட்டியெழுப்புதல்”  என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்பயிற்சி முகமா நடைபெறுகிறது.  இதில் இந்தியாவில் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த சுமார் 51 மீட்பு பணி அதிகாரிகள் மற்றும் 16 நட்பு நாடுகளைச் சேர்ந்த 24 பார்வையாளர்கள் இப்பயிற்சி முகமாமில் பங்கேற்றனர்.

சென்னை
இந்தியக் கடலோரக் காவல் படை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியை (சாரக்ஸ்) சென்னையில்  தொடங்கியது.

 இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் தேடுதல் மற்றும் மீட்பு, வணிகக் கப்பல்களின் ஏற்படும் தீயை அணைத்தல், கடத்தல்காரர் களை படகுகளில் விரட்டிச் சென்று கைது செய்தல், மீனவர்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான் நிகழ்வுகள் குறித்த நேரடி செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் கடலோரக் காவல் படையின் ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்க உள்ளன.

11,500 பேர் பத்திரமாக மீட்பு: பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து டாக்டர் அஜய்குமார் பேசியது, உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும், சாகர்மாலா போன்ற இந்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதிலும் இந்திய கடலோர காவல்படை முக்கிய பங்காற்றுகிறது.  இந்திய கடலோர காவல்படையினர் அண்மையில் 32 பங்களாதேஷ் மீனவர்களை பத்திரமாக மீட்டனர் என்பது இது போன்ற பயிற்சியின் தேவையை உணர்த்துகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகளில் நடுக்கடலில் சிக்கித் தவித்த சுமார் 11,500 பேர்களின் உயிர்களை கடலோரக் காவல் படையினர் பத்திரமாகக் காப்பாற்றியுள்ளனர் என்றார் அஜய்குமார்.

இந்நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து கூடுதல் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பரார், வேளாண்மை அமைச்சக இணைச் செயலாளர் (கடல் மீன்வளம்) டாக்டர் ஜுஜ்ஜவரபு பாலாஜி, இந்திய விமான நிலைய ஆணையத்தின் இயக்குநர் சரத்குமார் மற்றும் கடலோரக் காவல் படை உயர் அதிகாரிகள் பங்கேற்றன

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top