Close
நவம்பர் 22, 2024 6:55 காலை

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டிடம் சேதம்: அமைச்சர் ரகுபதி ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டடத்தினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், பழுதடைந்துள்ள கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  (28.08.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டிடமானது 40 ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில் திருச்சி பேருந்துகள் நிறுத்துமிடத்தில் தேநீர்கடை அருகில் கடைகள் மற்றும் நடைபாதைகள் வழியில் உள்ள வலுவிழந்த கான்கிரீட் பூச்சுகள் இன்று காலையில் பெயர்ந்து விழுந்தது. இதன்மூலம் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்நிலையில்,  பேருந்து நிலையத்தின் ஸ்திரத் தன்மையை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி NIT  குழுவினர் 14.08.2022 அன்று களஆய்வு மேற்கொண்டு 17.08.2022 அன்று மேற்படி பேருந்துநிலையக் கட்டிடம் பழுதடைந்த பயன் படுத்த இயலாத நிலையில் உள்ளதால் கட்டடத்தினை முழுமையாக இடித்து அகற்றலாம் என சான்றளித்துள் ளார்கள்.

அதன்படி பழைய நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பேருந்துநிலைய கட்டடம் அமைக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வழியாக தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.  இது தொடர்பாக  நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்த ஆய்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி, நகராட்சி ஆணையர் நாகராஜன், நகராட்சி பொறியாளர் சேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top