தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப் பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறைசார்பில் சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாமற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்தஆய்வு கூட்டம் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறைஅமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான்,பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் (08.09.2022) நடைபெற்றது.
சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறைஅமைச்சர் திரு.செஞ்சிகே .எஸ். மஸ்தான் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் சிறுபான்மையினர் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்தஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் 13 பயனாளிகளுக்குரூபாய் 84,500 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்களும், 12 பயனாளிகளுக்கு ரூபாய் 62,400 மதிப்பிலான விலையில்லா கிரைண்டர்களும், 64 பயனா ளிகளுக்குரூபாய் 11,30,000 இலட்சம் மதிப்பிலானசிறுதொழில் நிதிஉதவி தொகைக்கான காசோலைகளும், 45 பயனாளிக ளுக்கு ரூ. 2,31,045 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டி களும், 28 பயனாளிகளுக்கு உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ. 15,07,945 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.
மேலும்,சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்துஆய்வுக் கூட்டத்தில் உலமக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றிஆய்வு செய்யப்பட்டது .
குறிப்பாக விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை போன்ற பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.
இது நாள் வரை தஞ்சாவூர் மாவட்ட உலமாக்கள் மற்றும் இதரபணியாளர்கள் நலவாரியத்தில் 496 உறுப்பினர்கள் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு 417 விலையில்லா மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படும்.
மேலும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த கிறிஸ்தவ, முஸ்லீம் சமூக மகளிருக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இச்சங்கங்கள் திரட்டும் நிதிஆதாரத்திற்கேற்ப அரசின் இணை மானியம் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு சேரவேண்டிய நலத்திட்டஉதவிகள் எந்தஒருசிரமமின்றி விரைவாக வழங்கிட உத்தரவிடப் பட்டுள்ளது என்று சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறைஅமைச்சர் செஞ்சிகே .எஸ். மஸ்தான் தெரிவித்தார்.
இந்தஆய்வுக் கூட்டத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), முனைவர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்).
மாநகராட்சி மேயர் சண் இராமநாதன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) .என்.ஓ.சுகபுத்ரா, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசுதலைமை டவுன் ஹாஜி சையத் காதர் ஹுசைன், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் க.ரேணுகாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.