Close
செப்டம்பர் 20, 2024 5:50 காலை

திருப்பெருந்துறை ஊராட்சி அலுவலகத்தை பூட்டிய ஆளும்கட்சி பிரமுகரை கைது செய்யக்கோரி காவல்நிலையம் முற்றுகை

ஆவுடையார்கோவில்

ஆளும் கட்சி பிரமுகரை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகாவில் திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தை அலுவலக ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணமான ஆளுங்கட்சி பிரமுகரை கைது  செய்ய வலியுறுத்தி ஆவுடையார் கோவில் காவல் நிலைய முன்பாக திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பெறுந்துறை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கால்வாய் கட்டும் பணிமுடித்துவிட்டு உடனே NMR மூலம் பில் போட வேண்டும் என்று  திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாரதி என்பவர் கேட்டுள்ளார்.

அதற்கு ஊராட்சி மன்ற அலுவலகப் பணியில் இருந்த பெண்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச்சென்று வட்டார வளர்ச்சி அலுவலரைக் கேளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாரதி இன்று மதியம் 3 மணி அளவில் அலுவலக பணியாளர்களை உள்ளே வைத்து வெளியில் பூட்டிவிட்டுச்சென்றாராம்.

தகவலறிந்த அருகிலிருந்தோர்  வந்து பூட்டை உடைத்து அலுவலக பணியாளர்களை வெளியேற்றினர். இந்நிலையில் திருப்பெருந்துறை பஞ்சாயத்து எழுத்தர் குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் கொடுத்த புகாரின் பெயரில் திமுக நிர்வாகி பாரதி மீது நடவடிக்கையை எடுக்காததை கண்டித்து ஆவுடையார் கோவில் காவல் நிலைய முன்பாக 10 நிமிடம் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது ஆவுடையார் கோவில் காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய  பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top