Close
செப்டம்பர் 20, 2024 3:47 காலை

திருவொற்றியூரில் ரூ.30 லட்சம் செலவில் மாணவர்களுக்கான காலை உணவு சமையல் கூடங்கள் திறப்பு

தமிழ்நாடு

திருவொற்றியூர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத் தொடங்கி வைத்து சிற்றுண்டியை வழங்கிய மண்டலக் குழு தலைவர் தி.மு. தனியரசு.

 சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி மாணவர்களுக் கான காலை உணவு தயாரிப்பதற்காக ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடங்களை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் செயல் பாட்டில் உள்ள நிலையில் அரசு ஆரம்பப் பள்ளி மாணவர் களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மதுரையில் தொடங்கி வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை பெரும்பாலான இடங்களில் காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 14 ஆரம்பப் பள்ளிகளில் சுமார் 1,600 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு வசதியாக அன்னை சிவகாமி நகரில் ரூ. 20 லட்சம் செலவிலும், எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் ரூ. 10 லட்சம் செலவிலும் நவீன சமையல் கூடங்களை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சமையல் கூடங்களை திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் சங்கரன் ஆகியோர் திறந்து வைத்து பள்ளிக்களுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தேரடி அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி பேனா பென்சில்,  நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை தி.மு. தனியரசு வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், தமிழரசன், திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், சுந்தரமூர்த்தி,  வி.கே. ஏழுமலை, தியாகராஜன், எம். வி.குமார், ஆசைத்தம்பி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top