Close
நவம்பர் 21, 2024 9:14 மணி

கல்லூரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

புதுக்கோட்டை

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள அரசு கலைக்கல்லூரி் மாணவ மாணவிகள்.

கல்லூரியில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை அடுத்த மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படுவதாக மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லையாம்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி கல்லூரி முன்பாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணையலாளர்கள் அ.பாலாஜி, ச.பிரியங்கா, மாவட்டக்குழு அன்பரசன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கறம்பக்குடி துணை வட்டாட்சியர், கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து 15 நாட்கள் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top