ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவரங்கம் விரைவில் அமைக்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி தெரிவித்தார்.
திருப்பூர் குமரன் வாழ்ந்த இல்லத்தில் குமரன் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின் அவர் கூறியதாவது: திருப்பூர் குமரன் 119 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் அறிவுரைபடி இங்கு நானும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனும் அஞ்சலி செலுத்த வந்தோம்.
திருப்பூர் குமரனுக்கு நினைவரங்கம் அமைப்பதற்காக சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரங்கம் அமைக்கப்படும். அவர் வாழ்ந்த இல்லத்திலும் அவர் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். அதுவும் பரிசீலிக்கப்படும்.
இதே போல சுதந்திரப் போராட்ட தியாகி பொல்லானுக்கு நினைவு அரங்கம் அமைக்க இரண்டு இடங்கள் பரிசீலிக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தை தேர்வு செய்து தந்துள்ளனர். பெரிய இடமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் அவருக்கு நினைவரங்கம் அமைக்கப்படும்.
தியாகி ஈஸ்வரனுக்குநினைவரங்கம் அமைக்க பவானிசாகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் நினைவரங்கம் விரைவில் கட்டப்படும். மணி மண்டபம் அமைத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை தான் மக்கள் அங்கு செல்வார்கள் நினைவரங்கம் அமைக்கும் போது தொடர்ந்து அங்குள்ள மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்து வார்கள் என முதலமைச்சர் அறிவித்ததால் நினைவரங்கங்கள் அமைக்கப்படுகிறது.
வருடத்திற்கு 60 நாட்களுக்கு மேல் பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அந்த அரங்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் குறைந்த கட்டணம் பராமரிப்புச் செலவாக பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் அந்த நினைவரங்கங் களில்தியாகிகளின் உருவப்படம் சிலைகள் வைத்து பராமரிக்கப்படும் என்றார் அமைச்சர் எஸ். முத்துசாமி.