Close
நவம்பர் 22, 2024 7:33 காலை

சிவகங்கை மாவட்ட நிர்வாகம்- இந்திய மருத்துவ கழகம் சார்பில் பசுமை திருவிழா

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பசுமைத் திருவிழா தொடக்க விழாவில் மரக்கன்று விநியோகித்த ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை இணைந்து நடத்திய பசுமை திருவிழாவை, மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி,
தொடக்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை சார்பாக நடைபெற்ற பசுமை திருவிழாவை , மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, தொடக்கி  வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி  பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பசுமையான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், “பசுமை தமிழ்நாடு” இயக்கத்தை  தொடக்கி வைத்துள்ளார். அதனடிப்படையில், நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் 50  இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என, திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை தானாக முன்வந்து, அரசுடன் இணைந்து, சிவகங்கை பசுமை திருவிழா என்று பெயரிட்டு,  09.10.2022 முதல் 14.10.2022 வரை ஒருவாரகாலத்தில் 50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக, கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் 2,000 மரக்கன்றுகளை பள்ளிகள், கல்லூரிக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது..

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்ர்கள் மரக்கன்றுகளை முறையாகப் பராமரித்திடவும், அதேபோன்று பொதுமக்களும் தங்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை வீடுகளில் நல்லமுறையில் பராமரித்து, பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும்.

மேலும், மரக்கன்றுகள் வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்து பசுமையாக தமிழகத்தினை உருவாக்கு வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top