Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

சமூக நல்லிணக்க மனித சங்கிலி …புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங்களில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலியில் பங்கேற்றோர்

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 10 மையங்களில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிக் கட்சிகள், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமையன்று சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தி மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்திருந்தன.

இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங்களில் பல்லாயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற மனித சங்கிலியில், காங்கிரஸ் கட்சியின் திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், வடக்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் வி.முருகேசன், மாநிலச்செயலர் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகர், செய்தி தொடர்பாளர் பென்னட்அந்தோணிராஜ், மேப் வீரையா, இப்ராஹிம்பாபு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரைதிவியநாதன்,

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற மனிதச்சங்கிலியில் பேசிய காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

மதிமுக மாவட்டப் பொருளாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்தனன், திக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, விசிக மாவட்டச் செயலாளர் செப.பாவாணன், முஸ்லீம்லீக் மாவட்டத் தலைவர் அஷ்ரப்அலி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் அப்துல்கனி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் நியாஸ்அகமது உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

அறந்தாங்கில் நடைபெற்ற மனித சங்கிலியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மதிமுக நகரச் செயலாளர் ஜி.மோகன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன், விசிக சார்பில் நாகமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டையில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் ராமையா, மாயக்கண்ணு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், சிபிஐ சார்பில் எஸ்.ராஜேந்திரன், விசிக சார்பில் மருத.பார்வேந்தன், சிபிஐ(எம்.எல்) சார்பில் வீ.மு.வளத்தான். மதிமுக சார்பில் எஸ்.வைரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கறம்பக்குடியில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தி.ஞானசேகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், சிபிஐ சார்பில் ஏ.ஜேசுராஜ், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ.ஆரோக்கியசாமி, விசிக சார்பில் சந்திரபாண்டியன், சிபிஐ(எம்எல்) சார்பில் ம.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலங்குடியில் விசிக மாவட்டச் செயலாளர் சசி.பா.கலைவேந்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், சிபிஐ சார்பில் மா.திலகர், மதிமுக சார்பில் கே.பி.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீரனூரில் காங்கிரஸ் நகரச் செயலாளர் பழனியப்பன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், சிபிஐ சார்பில் எஸ்.நடராஜன், மதிமுக சார்பில் வி.கே.மதியழகன், விசிக சார்பில் அழகுவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அன்னவாசலில் சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.தர்மராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், காங்கிரஸ் சார்பில் செல்வராஜ், விசிக சார்பில் அய்யா நடராஜன், மதிமுக சார்பில் சவரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மணமேல்குடியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், விசிக சார்பில் வீரக்குமார், மதிமுக சார்பில் வே.நமச்சிவாயம், சிபிஐ சார்பில் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொன்னமராவதியில் சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.ராசு, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கிரிதரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், விசிக சார்பில் சின்னுபழகு, மதிமுக சார்பில் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமயத்தில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், சிபிஎம் சார்பில் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top