புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மற்றும் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்292 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மற்றும் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 292 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
அதன்படி திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 185 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 107 மாணவ, மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 292 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள்முதல் மாணவ, மாணவியர்கள் நலனில் தனிகவனம் செலுத்தி பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் ரூ.36,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை துவக்கி வைத்து, ஏழை, எளிய மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் கல்வியில் மிகுந்த அக்கரைகொண்டு முதல் வகுப்பு முதல் முதுகலை வரை இலவச கல்வியினை வழங்கியிருந்தார்கள். அதன்படி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு கல்வித் திட்டங்களை மாணவ, மாணவிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு இந்த விலையில்லா மிதிவண்டியின் மூலம் சென்று வருவது உடல்நலத்தை பேணிகாப்பதுடன், சரியான நேரத்திற்கு பள்ளிக்குச் சென்றவர முடியும் என்றார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.