Close
நவம்பர் 22, 2024 1:04 காலை

திருமயம் தொகுதியின் தேவைகள் குறித்து ஆட்சியருடன் அமைச்சர் ரகுபதிஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன் மாதிரி தொகுதியாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு தலைமையில், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில்  (21.10.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்  ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து தீர்க்கும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித் துறையை உருவாக்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பரிந்துரைகளை வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற வித்தியாசம் பாராமல், அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தொகுதி வாரியாக கோரிக்கைகள் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவரின் வழியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைவதுடன், படித்த வேலைவாய்ப் பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கவும், விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாசனத் திட்டங்களை உருவாக்கவும், பொதுமக்களின் வசதிக்காக புதிய வருவாய் கோட்டம், வட்டம் மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அமைத்திட உரிய கருத்துருக்களை அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் திருமயம் தொகுதிக்குள்பட்ட மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கியுள்ளேன். இக்கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் திருமயம் தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி தொகுதியாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top