Close
நவம்பர் 25, 2024 4:16 காலை

ஊராட்சியில் முறைகேடு புகார்… நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதிமுக பிரமுகர் தகவல்

புதுக்கோட்டை

வடவாளம் ஊராட்சி மீது முறைகேடு புகார் மனு

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில் சட்டத்துக்கு  நடைபெறுகின்ற மோசடிகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உரிய புகைப்பட ஆதாரத்துடன் அளித்த புகார் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை அணுகப் போவதாக அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடவாளம் ஊராட்சி, வடக்கு செட்டியாபட்டியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றியசெயலாளர் எஸ்.சுப்பிரமணியன், வடவாளம் ஊராட்சியில் நடைபெற்ற  முறைகேடுகள் குறித்து அளித்துள்ள மனு:

அதிமுக முன்னாள் நிர்வாகி
அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன்

வடவாளம் ஊராட்சிக்குள்பட்ட கதுவாரிப்பட்டி முதல் வெள்ளைக்கோன்பட்டி செல்லும் மெட்டல் சாலையை NRGS திட்டத்தின் மண்சாலை போலியாக வேலை பார்த்துக் கொண்டுள்ளனர்.

அரசு விதியின்படி மண் சாலையை மட்டும் மெட்டல் சாலையாக அமைக்கலாம்.15-ஆவது நிதி குழுவில் நெய்பியப்பட்டியில் தனியார் கோவில் சுற்று சுவர், பேவர் பிளாக் அமைக்கப்பட்டது. நெப்பியப்பட்டி கோவில் அருகில் பேவர் பிளாக் அமைத்தல் என்று AS வாங்கி கோவிலுக்குள் வேலை பார்த்துள்ளனர். அரசு விதிப்படி  பேவர் பிளாக் சாலையாக மட்டுமே அமைக்க வேண்டும். தனியார் கோவிலுக்கு ஊராட்சி நிதியை பயன்படுத்த கூடாது.

வடவாளம் ஊராட்சி தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. தற்போது ஊராட்சி தலைவராக  அருட்சிறுமலர் என்பவர் உள்ளார். ஆனால் தலைவராக ஊராட்சி கூட்டம் நடத்தியது கோப்புகளில் கையொப்பம் இடுவது தலைவரின் இருக்கையில் அமர்ந்துகொள்வது என தலைவரின் கணவர் ஞானபிரகாசம் என்பவர் செயல்படுகிறார். இதற்கு ஊராட்சி செயலாளர் உடந்தையாக உள்ளார். இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊராட்சியில் நல்ல நிலையில் இயங்கி வரும் குடிநீர் மோட்டார்களை பழுதுபார்த்ததாக போலி கணக்கை காட்டி பில் வைத்து ஊராட்சி செயலாளர், ஊராட்சி தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூன்று பேரும் கூட்டாக தவறு செய்கின்றனர்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக போட்டோ மற்றும் நகல் இத்துடன் இணைத்துள்ளேன். தலைவரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தலைவரின் கணவர்  செயல்படுகிறார். இதற்கு ஊராட்சி செயலாளர் உடந்தையாக உள்ளார்.  இது பற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 2019-ஆம் ஆண்டில் வடவாளம் ஊராட்சியில் வடக்கு செட்டியாபட்டி இந்திரா நகர் கரைய பிள்ளையார் கோவில், கீழக்காடு, அம்பால்புரம் நான்கு இடங்களில் மினு டேங்குகளில் குடிநீர் வீணாவதை தடுக்க பழுதடைந்த டேங்குகளை மாற்ற அப்போதைய வட்டார் வளர்ச்சி அலுவலர் வேலை உத்தரவு வழங்கி ஆஃபரில் வேலை கொடுக்கப்பட்டது.

வேலை முடித்தவுடன் அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்துவிட்டது. தேர்தல் முடிந்து தலைவராக  அருட்சிறுமலர் என்பவர் வந்தார். ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் அருட்சிறுமலர் இல்லை. தலைவரின் கணவர் ஞானபிரகாசம் மற்றும் அப்போதைய ஊராட்சி செயலாளர் மாணிக்கம் தலைவரின் கணவரிடம் வேலை செய்தமைக்கான தொகை யை எனக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு தலைவரின் கணவர் ஒரு மாதத்தில் கொடுத்து விடுவோம் என்றார். ஆனால் 6 மாதம் ஆகியும் பணம் கொடுக்கவில்லை. பிறகு ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்டு சிவலிங்கம் என்பவர் வந்தார். ஊராட்சி செயலாளர் சிவலிங்கத்திடம் கேட்டோம். 6 மாதமாக  தவணை சொல்லி அலைக்கழித்தார்.

அதற்கு பிறகு ரூ.30,000 (முப்பதாயிரம்) பணம் கொடு, தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என லஞ்சம் கேட்டார்.  இதில் 6 மாத காலம் சென்றது. அதற்கு பிறகு நான் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் கொடுத்தேன்.

இரண்டு மாதம் கழித்து அப்போதைய AD பஞ்சாயத்து ஸ்ரீராம்  நான்  லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய புகார் தொடர்பாக விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதன் பேரில் 12.01.2022 கையொப்பம் போட்டு AD பஞ்சாயத்து  கடிதம் அனுப்பினார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன்  விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இன்று வரை என்னை அழைத்து விசாரிக்கவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டை ஒன்றியம், வடவாளம் ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து 18-07-2022 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கு பதிலும் வரவில்லை அதனால் மீண்டும் இன்று  AD பஞ்சாயத்து அதிகாரியிடம்  மீண்டும் புகார் மனுவை  நேரில் அளித்துள்ளேன்.

எனவே விசாரணை செய்து காலம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். இதில்  தவறும் பட்சத்தில் உயர்நீதி மன்றத்தை அணுகி முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை என  சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top