Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

காலை உணவுத்திட்டம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன் பெறும் 21 மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள்

தமிழ்நாடு

தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

நகரப் பகுதிகளிலும் ,கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுடவில்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.

பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பதுமட்டுமல்ல. சிலருடைய குடும்பசூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக் கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்புமுதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளிமாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு. எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும், பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் “முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை  முதலமைச்சர்  அறிவிப்பு வெளியிட்டிருந்தார். நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலைஉணவுத் திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 417 மாநகராட்சிபள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சிபள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராமஊராட்சிபள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள். என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 1,14,095 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மாணவ மாணவியகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச் சத்து குறை பாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச் சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர் களின் வருகையை அதிகரித்தல்,வேலைக்குச் செல்லும் தாய்மார் களின் பணிச் சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் குறித்து தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம்,  தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளியில் பயிலும் 375 மாணவ மாணவிகளுக்கு திங்கட்கிழமை தோறும் சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,செவ்வாய்க்கிழமை தோறும் கோதுமை ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்,வியாழக்கிழமை தோறும் அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக சேமியா கேசரியும், வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு
தஞ்சையில் நடைபெற்ற  காலை சிற்றுண்டி திட்டத் தொடக்க விழாவில்  எம்எல்ஏ-க்கள் உடன் ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

இதேபோன்று கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளியில் பயிலும் 1067 மாணவ, மாணவிகளுக்கும் திங்கட்கிழமை தோறும் ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் செவ்வாய்க்கிழமை தோறும் ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை தோறும் வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை தோறும் கோதுமை ரவை உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,வெள்ளிக்கிழமை தோறும் கோதுமை ரவா காய்கறி கிச்சடி மற்றும் கூடுதலாக ரவாகேசரி வழங்கப்பட்டு வருகிறது ஆக மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ, மாணவிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர்

தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கூட்டுறவு காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபுசிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளி யில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில்  (Centralised Kitchen) உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது

மாணவ மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல் ஊட்டச்சத்து குறை பாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல்,வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையை குறைத்தல், ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது  என்றார் ஆட்சியர்.

இத்திட்டத்தில் பயன் பெறும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின்  கருத்து:  தஞ்சாவூர் கூட்டுறவு காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்புபயின்று மாணவி ஓவியதிலகம் கூறியது:

தஞ்சை

நானும் என் நண்பர்களும் தினமும் பள்ளியில் வழங்கப்படுகின்ற காலைஉணவினை விரும்பி சாப்பிடுகின்றோம். சில சமயங்களில் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்ற சூழ்நிலை தற்பொழுது முழுவதுமாக மாறி விட்டது. தினமும் காலையில் வழங்கப்படுகின்ற சூடான உணவு வகைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.

தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கதிரேசன் மற்றும்  தாய் அஞ்சலை ஆகியோர் கூறியது: கூலி வேலைக்குச் செல்வதால் காலை உணவு வீட்டில் சமைக்க முடியாத நிலை, தற்போது பள்ளியில் காலை உணவுத் திட்டத்தால் மாறிவிட்டது.

தஞ்சை

இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி என்றனர். இச்செய்தி தொகுப்பை தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா  வெளியிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top