Close
நவம்பர் 22, 2024 10:18 காலை

ஈரோடு மாநகராட்சியில் சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி

ஈரோடு மாநகராட்சியில் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூபாய் 75 கோடி நிதி ஒதுக்கி உள்ளது விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று வீட்டு செய்தி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி கூறினார்.

ஈரோடு மாநகராட்சி மண்டலம் இரண்டில் பகுதி சபை கூட்டத்தில் மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார் பின்னர் அவர் கூறியதாவது:  ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள் ளன அவைகளை சரி செய்ய சிறப்பு நிதி பெறப்பட்டு சாலைகள் மேம்படுத்தப்படும்

ஈரோடு மாநகராட்சியில் நிதி தட்டுப்பாடு உள்ளது. பல்வேறு அரசு மானியங்கள் வரிவருவாய் மூலம் நிர்வாகம் நடக்கிறது. இருந்தபோதிலும் செலவினங்கள் அதிகம் உள்ளன. எனவே சிறப்பு நிதி பெறப்பட்டுள்ளது .

ஈரோடு மாநகராட்சி மாமன்றகூட்டத்தில் திமுக உறுப்பினர் கள் தங்கள் பகுதி பிரச்சனைகளை பற்றி பேச உரிமை உள்ளது. அதில் ஒரு சிலர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போல் பேசுகின்றனர் என்ற புகார் உள்ளது. அதனால்தான் ஈரோடு மேயர் நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினரை யாரோ தூண்டிவிட்டு பேசுவதாக குறிப்பிட்டார். அவருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சி போல பேசவும் முற்படலாம். எனினும் மக்கள் பிரச்னை பேசுவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது .

ஈரோடு மாநகராட்சி திமுக உறுப்பினர், குமலன் குட்டை பகுதியில் மாநகராட்சி சொந்தமான பூங்காவை இடித்தது குறித்த புகார் குறித்து அங்குள்ள மக்களிடம் விசாரித்து வருகிறோம்.  விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு மாநகராட்சி துப்புரவு பொறியியல் சுகாதார பிரிவு பணியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணிக்கு அமர்த்தும் அரசு ஆணை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்னை தீர்க்கப்படும். பகுதி மற்றும் வார்டு சபா கூட்டங்களில் பெறப்படும் முதியோர் ஓய்வூதியம் வேலைவாய்ப்பு கடன் வசதி குறித்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும்.  பின்னர் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் முத்துசாமி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top