புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம், மறமடக்கி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்1,368 பயனாளிகளுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மறமடக்கி வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 1,368 பயனாளிகளுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கி பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி இன்றையதினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,368 பயனாளிகளுக்கு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் உயர் தரத்திலான கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி அழியாநிலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 40,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆலங்குடியில் புதிதாக புறவழிச்சாலையும், வம்பன் அருகில் புதிய துணை மின்நிலையமும் அமைக்கப்படவுள்ளது.
மேலும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றும் வகையில் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் வெள்ளாறு, வெட்டாறு, அம்பலியாறு உள்ளிட்டவைகளை இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளின் கோரிக்ககை களையும் நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் பெறப்பட்டு அவற்றை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தாயாக, தந்தையாக இருந்து அவர்களுக்கு புதமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும், மக்கள் நலன் காக்கும் வகையில் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தையும், கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களை போன்ற வைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்றார் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.