முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேருவின் 133-வது பிறந்த நாளையொட்டி ராஜீவ் நட்பகம் சார்பில் வண்ணாரப் பேட்டை குருகுலம் நர்சரி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி மாணவர்கள் கொண்டாடினர்.
காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.