திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகள் பங்கேற்க நவ.22 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள 38-ஆம் ஆண்டு நேரு தேசியக் கலை விழாவினை ஒட்டி மாணவர்களுக்கிடையேயான இசை, ஓவியம், கவிதை, பேச்சு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள் வரும் விண்ணப்பங்களை நவ. 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு பாரதி பாசறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறி்த்து திருவொற்றியூர் பாரதி பாசறை செயலாளர் முனைவர் மா.கி.இரமணன் கூறியது: வெள்ளி விழா கண்ட திருவொற்றியூர் பாரதி பாசறை ஆண்டுதோறும் நேரு தேசியக் கலை விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் வரும் வரும் நவ.26- ம் தேதி சனிக்கிழமை இவ்விழா திருவொற்றியூரில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளோம்.
முதல் 5 வகுப்புகள் வரைய பயிலும் மாணவர்களுக்கு பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தலைப்பில் இசை (தலா 3 நிமிடம்), 6 முதல் 8 வகுப்பு வரை ‘ தலைக் கவசம், முகக்கவசம் உயிர்க்கவசம்’ என்ற தலைப்பில் ஓவியம் வரைதல் (60 நிமிடம்), 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு ‘ராமலிங்க வள்ளலாரும் இருநூறு ஆண்டுகளும்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி (தலா 3 நிமிடம்), 11, 12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ‘வாழ்வியல் நெறியில் வள்ளலார், பாரதியார்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டிகளும் (60 நிமிடம்) நடைபெற உள்ளன.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் நவ.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதுடன் அதிக பரிசுகளை பெறும் மாணவர்களின் பள்ளிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் திருவொற்றியூர் வடக்குமாடவீதியில் உள்ள டி.கே.பி.மகாலில் நவ.26-ஆம் சனிக்கிழமை 2 மணிக்கு நடைபெறும். வெற்றி பெருபவர்களுக்கான பரிசளிப்பு விழா இதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: திருவொற்றியூர் பாரதி பாசறை, 39/13, சோமசுந்தரம் நகர் நான்காவது தெரு, திருவொற்றியூர், சென்னை-600019, அலைபேசி: 94441-82153, 72006-72972 என தெரிவித்தார்.