Close
நவம்பர் 22, 2024 4:56 மணி

நவ.27 -ல் புதுக்கோட்டையில் 5 மையங்களில் சீருடைப்பணியாளர் பணிகளுக்கு தேர்வு

புதுக்கோட்டை

நவ.27 -ல் சீருடைப் பணியாளர் தேர்வு 5 இடங்களில் நடைபெறவுள்ளது

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக காவல் துறையில் 2022 – ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் 3552 இரண்டாம்நிலை காவலர், சிறைகாவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத்தேர்வு வரும் 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 7634 விண்ணப்ப தாரர்களுக்கு (5466 ஆண் 2168 பெண் விண்ணப்பதாரர்கள்) எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும், புதுக்கோட்டை அருகே  லெனா விலக்கிலுள்ள   மவுன்ட்சீயான் பொறியல்  கல்லூரி,  மவுன்ட்சீயோன் CBSE  பள்ளி, அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல்  கல்லூரி,  புதுக்கோட்டை மாலையீடு மவுன்ட்சீயோன்  மெட்ரிக் பள்ளி,  கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீபாரதி கல்வி நிறுவனம் ஆகிய 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

எழுத்துத் தேர்விற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவுச்சீட்டு (Hall Ticket) அடையாள அட்டை நகல் (ID Proof) ,  நீல நிற அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மற்றும் 4) எழுத்துக்கள் எதுவும் இல்லாத பரீட்சை எழுதும் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
Cell Phone, Smart watch, Blutooth, Head Phone, Pendrive, Calculator பென்சில், ரப்பர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எக்காரணம் கொண்டும் வீட்டிலிருந்து தேர்விற்கு வரும் போதே கொண்டு வரக்கூடாது.

 விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளான 27.11.2022 அன்று காலை சரியாக 08.00 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதிக்கப் படுவார்கள். தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் முகக்கவசம் (MASK) கட்டாயமாக அணிந்து வர வேண்டும்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் 27.11.2022 காலை 07.00 மணி முதல் இயக்கப்படும்.Hall Ticket  இல்லாத வர்கள் எக்காரணம் கொண்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். Hall Ticket  தொடர்பாக சந்தேகங்கள் ஏதேனுமிருப்பின் மாவட்ட காவல் அலுவலகத்தினை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட காவல் அலுவலகம் –  க. இளஞ்செழியன், உதவியாளர் – 9159077855,   மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம்94981-00730.    என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top