Close
செப்டம்பர் 20, 2024 1:25 காலை

சென்னிமலை கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறப்பு

ஈரோடு

கீழ்ப்பவனை வாய்க்கால் கடைமடை பகுதியில் பலத்த மழை - சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறந்து விடப்பட்டது.

கீழ்ப்பவனை வாய்க்கால் கடைமடை பகுதியில் பலத்த மழை – சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடையில் தண்ணீரை திறந்து விடப்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலின் கடைமடை பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் செல்லும் கடைமடை பகுதி யான திருப்பூர் மாவட்டம் முத்தூர் மற்றும் மங்களப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்கு விவசாய நிலங் களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அங்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தில் உள்ள முதலைமடை என்னும் இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து ஓடை வழியாக பொதுப்பணித்துறையினர்  செவ்வாய்க்கிழமை காலையில் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.

ஓடையில் செல்லும் தண்ணீர் மேட்டூர், கரைப்புதூர், சரளைக் காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 தரைப்பாலங் களை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் இந்த வழியே பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மேலும் ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது. கடைமடை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் வடியும் வரை ஓடையில் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top