Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

இயற்கை வளங்கள் பாதுகாப்பு- யோகா கலை முக்கியத்துவம்: நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொள்ளும் இளைஞருக்கு வரவேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டைக்கு வருகை தந்த அவரை நகரில் சாந்த நாதசுவாமி ஆலயம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் அரங்குளவன் வரவேற்பளித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

இயற்கை வளங்களை பாதுகாக்கவும் யோகா கலை முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா நடை பயணமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தவர்க்கு வரவேற்பு இயற்கை வளங்களை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தியும் யோகா முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் மைசூரை சேர்ந்த கிருஷ்ணா( 29 ) நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக திருப்பத்தூர் (சிவகங்கை) உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 9 .12. 2022 அன்று காலை புதுக்கோட்டைக்கு வருகை தந்த அவரை நகரில் சாந்த நாதசுவாமி ஆலயம் முன்பு விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் அரங்குளவன் வரவேற்பளித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் விஸ்வ இந்து பரிஷத் இணை செயலாளர் எஸ் சுரேஷ், அமைப்பாளர் பி சரவணன், ரோட்டரி தலைவர் பிரகாஷ், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர் நமச்சிவாயம், சமூக ஆர்வலர் ஞானக்கலைசேகர் மற்றும் யோக கலை பயிற்சியாளர்கள், மாணவர்கள்,  வர்த்தக பிரமுகர்கள் வாழ்த்தினார்கள். பின்னர் இளைஞர்  கிருஷ்ணா  கந்தர்வ கோட்டை வழியாக தஞ்சாவூருக்கு சென்றார்.     அவரை  அனைவரும் வழி அனுப்பி வைத்தனர்.

நடை பயணம் குறித்து  கிருஷ்ணா கூறுகையில்,   கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி மைசூரில் பயணத்தை துவங்கினேன். வழி நெடுகிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

மூன்று ஆண்டுகள் இந்தியா முழுவதும் 28 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். என்னுடைய பயணம் முழுவதும் நடந்தே  செல்ல முடிவு செய்துள்ளேன். தினமும் அதிகாலை 6 மணிக்கு என்னுடைய பயணத்தை துவங்கி பன்னிரண்டு மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி துவங்கி இரவு வரையிலும் நடந்து வருகிறேன் சமூக ஆர்வலர்கள் பலர் என்னை வரவேற்று  வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றனர்  என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top