Close
செப்டம்பர் 20, 2024 5:53 காலை

எண்ணூர் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையால் பரபரப்பு 

சென்னை

எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் ஒதுங்கிய கடல் வழி மிதவை

கடல் கொந்தளிப்பான் எண்ணூர் கடற்கரை அருகே ஒதுங்கிய கடல் வழி கால்வாய் மிதவையால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு அருகே கரையை கடந்தது. இதனால் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே காற்று அதிவேகமாக வீசத் தொடங்கியது.  இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு குறிப்பாக காசிமேடு, திருவெற்றியூர், எண்ணூர்,  காட்டுப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்தன.
வெள்ளிக்கிழமை இரவு மிக வேகமாக வீசிய காற்றும் கனமழையும் பொது மக்களை பீதிக்கு உள்ளாக்கின. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் அவசர அவசரமாக வெளியே கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் இரும்பு தகடுகளால் செய்யப்பட்ட தொட்டி வடிவத்திலான மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.
இதனால் பீதியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மர்ம பொருள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் துறைமுகங்களுக்கு கப்பல்கள் வந்து செல்லும் கடல் வழி கால்வாயை அடையாளம் காட்டும் மிதவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை எண்ணூர் துறைமுகங்களின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக எடுத்து அவர்களும் அங்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு ஏதோ ஓர் இடத்தில் இருப்பு வைக்கப்பட் டிருந்த மிதவைதான் இது என்பது தெரியவந்ததை பரபரப்பு முடிவுக்கு வந்தது.
எண்ணூரில் கடலரிப்பு..
சென்னை
கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி  தாழங்குப்பம் அருகே கடுமையாக சேதமடைந்த எண்ணூர் விரைவு சாலை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top