Close
நவம்பர் 22, 2024 4:43 காலை

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்துக்கு நூல்கள் வழங்கிய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்திற்கு 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட திமுக செயலாளர் கேகே செல்லபாண்டியன் தலைமையில் வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பூங்குடி சிவா முன்னிலையில், ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான சட்ட புத்தகங்களை  சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார் .

நிகழ்ச்சியில் பார் கவுன்சில் பொறுப்பாளர் சின்னராஜ் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் உள்பட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top