Close
செப்டம்பர் 18, 2024 12:34 காலை

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது

ஈரோடு

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம்

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் ஆத்மா மின் மயானத்தில், தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் சகாதேவன், ரோட்டரி ஆளுநர் இளங்குமரன் ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.

இந்த விழாவில், அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குநர் தங்கவேலு, பொருளாளர் சரவணன், செங்குந்தர் பள்ளி தாளாளர் சிவானந்தம், ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ஞானமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை வி.கே.ராஜமாணிக்கம் செய்திருந்தார்.

இதுகுறித்து ஆத்மா நிர்வாகிகள் கூறியதாவது:  கிராமங்களிலும் ஆத்மா மின் மயானத்தின் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தியுள் ளோம். கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்ய ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தேவைப்படும்.

தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் எரியூட்டி, இறந்தவரின் குடும்பத்திற்கு அஸ்தி வழங்கப்படும். நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஆத்மாவின் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.

முழுக்க முழுக்க காஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும்.

இந்த வாகனத்தின் சேவையை பெற கட்டணமாக ரூ.7,500 செலுத்த வேண்டும். எனவே, இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை பதிவு செய்ய செய்ய கட்டணமில்லா தொலை பேசி எண்ணான 96557 19666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்கள் கட்டாயம் உறுதிமொழி படிவம், அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top