Close
செப்டம்பர் 19, 2024 11:21 மணி

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: புறக்கணிக்கப்படும் புதுக்கோட்டை மாணவ, மாணவிகள்…!

புதுக்கோட்டை

பல்கலைக்கழகங்களுக்கிடையேயான அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிக்கு புதுக்கோட்டை மாவட்ட மாணவ, மாணவிகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்குள்பட்ட புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் தடகளம், கபடி, கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகள் நடத்தும் கல்லூரிகளுக்கு பாரதிதாசன் பல்கலை. சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. பாரதிதாசன் பல்கலை. அளவில் வெற்றி பெறும். மாணவ, மாணவிகள் தென்மண்டல மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். ஒரு சில விளையாட்டில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியிலும் பங்கேற்க அனுப்பப்படுவர்.

ஆண்டுதோறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான  ஆண்கள். பெண்கள் பங்கேற்கும் அகில இந்திய  குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது.

நிகழாண்டுக்கான குத்துச்சண்டை போட்டிகள்  கடந்த (டிச.4 ) ஞாயிற்றுக்கிழமை  பாரதிதாசன் பல்கலை. வளாகத்தில் நடந்தது. இந்த குத்துச்சண்டை போட்டிகள் 46 – 48 கிலோ எடை பிரிவு முதல்   81 கிலோ எடை பிரிவு வரை  மேற்பட்டோர் என மொத்தம் 12 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் தங்கம் வெல்பவர்கள் அகில இந்திய போட்டிக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

ஆனால், வெற்று பெறும்  மாணவிகள் அனைவரையும்  அகில இந்திய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு அனுப்பி வைப்பதில் முரண்பாடான நிலையே  கடந்த 6 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது.

கடந்த(2021) ஆண்டும் இதே போன்ற நிலை ஏற்பட்டபோது, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனை வீராங்கனைகள், பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் நேரில் சந்தித்து  முறையிட்டனர்.

அமைச்சர் உடனடியாக பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு  நடவடிக்கை எடுத்தார். அதன் பேரில், பாரதிதாசன் பல்கலை. சார்பில் குத்துச்சண்டை போட்டிக்கு மாணவிகள் அகில இந்திய பல்கலை போட்டிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிகழாண்டுக்கான அகில இந்திய பல்கலை.க்கு இடையேயான  குத்துச்சண்டை போட்டி ஹரியானாவில்  டிச.26 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வரும் 23 -ஆம் தேதி அங்கு  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேந்த மாணவ, மாணவிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில்,  13 மாணவர்கள்  12 மாணவிகள் அடங்குவர். இதில், மாணவிகளில் 5 பேரும், மாணவர்களில் 10 பேர் மட்டும் அகில இந்திய போட்டியில்  பங்கேற்த பரிந்துரை செய்து மீதமுள்ள மாணவிகள் 7 பேர் மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 10 பேர் அனுப்பப்படவில்லை. இப்போட்டியில்  பங்கேற்றால்தான் மாணவிகளின்  திறமை வெளி உலகுக்கு தெரியவரும். தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும்.

போட்டியில் பங்கேற்றால், அவர்களுக்கு கிடைக்கும் மதிப்புமிக்க சான்றிதழ் மூலம், விளையாட்டு வீரர்களுக ஸ்போர்ட்ஸ் கோட்டாவுக்கு தகுதி பெறுவர். போலீஸ்உள்ளிட்ட அரசின் வேலைவாய்ப்பு பெற பெண்களுக்குஉதவியாய் இருக்கும்.

இப்பிரச்னை தொடர்பாக பயிற்சியாளர்கள் அமைச்சர் மெய்யநாதளை கடந்த செவ்வாய்க்கிழமை  நேரில் சந்தித்து முறையிட்டனர்.. அவரும்   பாரதிதாசன் பல்கலை. அதிகாரிகளிடம் பேசியும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட  மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை (டிச.19) இரவு  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜாவை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி தங்களை ஹரியானாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா கூறியது:  புதுக்கோட்டை மாவட்ட  மாணவ, மாணவிகளை அகில இந்திய போட்டிக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசினேன்.  அனைவரையும் போட்டியில் பங்கேற்க  உரிய ஏற்பாடுகளை செய்வதாக மாணவர்களிடம் கூறியுள்ளேன். இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று  தீர்வு காண முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்உதயநிதி ஸ்டாலின்,  பதவி ஏற்றவுடன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே, அவர் நடவடிக்கை எடுத்து  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை  அகில இந்திய பல்கவை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கச்செய்ய வேண்டும்   என்பதே திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு  உள்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top