Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

தனியார் மயமாக்கும் அரசாணை 152 ஐ ரத்து செய்ய வேண்டும்

புதுக்கோட்டை

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜம்பு தலைமையில் புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு ஆள் குறைப்பு செய்து தனியார் மயமாக்கும் அரசாணை 152 ஐ ரத்து செய்ய வேண்டும் என்றார்  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்கத்தின் தலைவர் ஜம்பு .

புதுக்கோட்டை நகர் மன்ற வளாகத்தில்  தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநிலச் சங்கம் தஞ்சை மண்டல நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டி:

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு, ஆள் குறைப்பு செய்து தனியார் மயமாக்கும் அரசாணை 152 ஐ ரத்து செய்ய வேண்டும்.

ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையுடன் 2022 2023 சேர்த்து உடன் அகவிலைப்படி அளிக்க வேண்டும் என்றார்  அவர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சிகளின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற புதுகை எம்எல்ஏ முத்துராஜாவுடன் சங்க நிர்வாகிகள்

இக்கூட்டத்தில்  அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில துணைச் செயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான  டாக்டர் வை முத்துராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன்,  நகர கழகச் செயலாளர் ஆசெந்தில், பொதுக்குழு உறுப்பினர் என். சாத்தையா , நகர்மன்ற உறுப்பினர்  காதர் கனி,  அறந்தாங்கி நகராட்சி ஆணையர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top