Close
நவம்பர் 22, 2024 12:15 மணி

புதுகையில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின்  ஆலோசனைக் கூட்டம் (26-12-2022) நடைபெற்றது.

புதுக்கோட்டை   மரக்கடை சந்து 5 -ஆம் வீதியில் உள்ள நமது மக்கள் கட்சி அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு (SFRBC) மத்திய மண்டல தலைவர் திருச்சி மணிவேல்தேவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

இதில், அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க செயலாளர் நிலாமணியன், தென்னிந்திய யாதவ மகாசபை மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, வீர சைவ பேரவை மாவட்ட செயலாளர் முத்துகருப்பன் நாயுடு, சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நமது மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மத்திய மண்டல துணைத் தலைவர் சின்னத்தம்பி யாதவ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் மோகன், மற்றும் ஐயப்பன், நாயுடு சங்கம் தேவராஜன், வீர சைவ பேரவை மாவட்ட பொருளாளர் சதாசிவம், அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் வீர சைவ பேரவை ஜெயராமன், நமது மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இராம. சுரேஷ்வர்மன்.

அலுவலக செயலாளர் செல்லவிக்னேஷ்மஞ்சாடியார், பூவரசகுடி முருகேசன், அறந்தை பாலகுமாரன், முத்துப்பாண்டி, மற்றும் கள்ளர், மறவர், அகமுடையார், பார்க்கவ குல உடையார், யாதவர், முத்தரையர், அனைத்து வல்லநாடு செட்டியார் நல சங்கம், வெள்ளாளர் வேளாளர் சங்கம், நாயுடு வீர சைவ பேரவை பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நமது மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மத்திய மண்டல செயலாளர் டாக்டர் சரவண தேவா பேசியதாவது:  எதிர்வரும் ஜனவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர், மேனாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தேர்வாணைய குழு உறுப்பினர் சமூக நீதி போராளி ஐயா இரத்தின சபாபதி  ஆலோசனைப்படி கொடி ஏற்று விழாவும் பிரசார பொதுக்கூட்டமும் நடத்துவது. அந்தவிழாவிற்கு வருகை தர உள்ள அனைத்து சமூக மாநில தலைவர்களை புதுக்கோட்டை நகரின் நுழைவுவாயிலான திருக்கோகர்ணத்தில் சிறப்பான வரவேற்பளிப்பது.

பிற்படுத்தப்பட்டோர்  256 சமூகங்களின் சமூக நீதி கூட்ட மைப்பு தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத் திலும் வழக்குகள் தொடுத்து சட்டப் போராட்டங்களில் வாயிலாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றது.

தற்போது ஒன்றிய அரசு அமல்படுத்திய உயர் ஜாதியினர் மாத வருமானம் 66 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளவர்களுக்கு 10%  இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்காடி இன்று வரை தமிழக அரசையும், ஒன்றிய அரசையும் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், நமது  குழந்தைகளின்  கல்வி வேலை வாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு போன்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது.

இப்போராட்டத்தை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வரும் ஜனவரி மாதம் பிரசார பொதுக்கூட்டம் நடத்தி  அதை மக்கள் திரள் போராட்டமாக மாற்றுவதற்கு அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும் என்றார் மு. சரவணதேவா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top