இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு அகிம்சா வழி, ஆயுதவழி, புரட்சி வழி போன்ற பன்முகத்தன்மை கொண்டது என்றார் த. ஸ்டாலின்குணசேகரன்.
ஈரோடு வேளாளர்மகளிர் கல்லூரியில் இந்திய விடுதலையின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட நூறு மாணவிகளுக்கு த.ஸ்டாலின்குணசேகரன் தொகுத்த‘ விடுதலை வேள்வியில் தமிழகம்’என்ற இரண்டு பாகங்கள் அடங்கிய நூல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற த.ஸ்டாலின் குணசேகரன் மேலும் பேசியதாவது :
200 ஆண்டு காலம் நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டம் அனைத்து வகைகளிலும் வரலாற்று முக்கியத் துவம் கொண்ட அம்சங்களைக் கொண்டதாகும். அகிம்சா வழி, ஆயுதவழி , அயலகத்திலிருந்த இந்தியர்களைப் படை திரட்டிய புரட்சி வழி என்ற பன்முகத் தன்மை கொண்டது இந்திய விடுதலைப் போராட்டம்.
இளைய தலைமுறையாக விளங்கும் கல்லூரிமாணவ- மாணவியர் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆழ்ந்து கற்கிறபோது அவர்களது மனதில் நாட்டுப்பற்று ,சமூகஉணர்வு , சேவை மனப்பான்மை போன்ற . தேச முன்னேற்றத்திற்கான கடின உழைப்பு ,லஞ்ச லாவண் யத்திற்கு இடம் கொடுக்காத இலட்சிய உணர்வு உள்ளத்தில்உருவெடுக்கும்.
உலகெங்குமுள்ள தமிழர் வீட்டில் ஏற்படுத்தப்படும் நூலகங்களில் முதல்நூலாக இடம் பெற வேண்டியது திருக்குறள்.‘விடுதலைவேள்வியில்தமிழகம்’நூல் பலவித தொடர்ந்த , நுட்பமான , ஆய்வு பூர்வமான முயற்சிகளுக்குப் பிறகு வெளி வந்துள்ளது. இந்நூல் உருவாக்கமே வேள்வி போன்றதாகும்.தமிழர் வீட்டு நூலகங்களில் இடம்பெற விரல்விட்டு எண்ணத்தக்க நூல்களுள் ஒன்று‘விடுதலை வேள்வியில்தமிழகம்’என்றுஆய்வாளர்கள்குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று தமிழகமெங்கும் தேர்வுசெய்யப்பட்ட பல்லாயிரம் கல்லூரி மாணவர்களின் கரங்களுக்கு தியாகத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பறைசாற்றும் இந்நூல் சென்றடைய வேண்டும். இந்நூலைப் பரிசளிப்ப தோடு ஆழ்ந்து படிக்கத் தூண்டுகிற வகையில் இந்நூலை அடிப்படையாக வைத்து மாநில அளவில் பேச்சு ,கட்டுரை , வினாடிவினா ஆகிய போட்டிகளும் நடத்தி கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வேளாளர்மகளிர் கல்லூரியின்தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லூரிமுதல்வர் செ.கு.ஜெயந்தி வரவேற்றார். முதுகலை மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறைத்தலைவர்பொ.கார்த்திகா மாணவர்கள் தேர்வு குறித்து விளக்கவுரையாற்றினார். கல்லூரி அறக்கட் டளை உறுப்பினர்கே.எம்.பாம்பணன் முன்னிலை வகித்தார். வரலாற்றுத்துறைப் பேராசிரியர் என்.கவிதா நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டையொட்டி பலபோட்டிகள் வைத்துத்தேர்வு செய்யப்பட்ட நூறு மாணவி களுக்கு மேடையில் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’என்ற இரண்டு பாகங்கள் அடங்கிய நூல்பரிசாக வழங்கப்பட்டது.
ஈரோடு வேளாளார் மகளிர் கல்லூரியில் நிகழ்வில் பேசுகிறார் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன். உடன் கல்லூரியின் தாளாளர் எஸ்.டி.சந்திர சேகர் , கல்லூரி முதல்வர்.கு. ஜெயந்தி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பொ.கார்த்திகா, கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் கே.எம்.பாம்பணன் ஆகியோர் உள்ளனர்.