துளிர் திறனிவுத் தேர்வில் வெற்றி பெற்ற கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கொத்தகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் நடத்தப்பட்ட துளிர் திறனறிவு தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு துளிர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்வியாளர் சக்தி முருகேசன் முன்னிலையில் வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவில் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஆண்டுதோறும் துளிர் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வினை 6 முதல் 12 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு எழுதலாம் என்றும், தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும், அறிவியல் இயக்கமானது வினாடி வினா மந்திரமா? தந்திரமா? துளிர் இல்லம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும், அறிவியல் மனப்பான்மையை மாணவர் களுக்கு தொடர்ச்சியாக 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூடநம்பிக்கையை ஒழிக்கவும் அறிவியல் மனப்பான்மையுடன் கூடிய சமூகத்தை உருவாகும் நோக்கில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது என்றும், மாணவர்கள் துளிர், ஜந்தர் மந்தர், சிறகு ஆகிய இதழ்களை வாசிக்க வேண்டும் என்றார் அவர்.
இப்பள்ளியின் ஆசிரியை கலைமணி சிறப்பாசிரியர் அறிவழகன், தன்னார்வலர் திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக பள்ளியின் சார்பில் தோட்டங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் செயல்பாடுகள் மூலம் விதை முளைத்தல்,வேர் மூலம் நீரேற்றம் செய்தல் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கும் மரம் நடுவதன் அவசியத்தையும்,. மர நடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கணித பட்டதாரி ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்