Close
நவம்பர் 22, 2024 10:37 காலை

செகந்திராபாத் – இராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்..

மதுரை

செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு ரயில் இயக்கம்

செகந்திராபாத் – இராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுமென  தென்மத்திய ரயில்வே  அறிவித்துள்ளது.

செகந்திராபாத் இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் (07695) ஜனவரி 4 முதல் ஜனவரி 25 வரை புதன்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07696) ஜனவரி 6 முதல் ஜனவரி 27 வரை வெள்ளிக்கிழமைகளில் ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

இந்த ரயில்கள் நலகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர்,கூடூர், சென்னை, எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி ,மயிலாடுதுறை,  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை ,மானாமதுரை, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு:

கொல்லம்- தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக் கோட்டை வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி – எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ரயில்கள் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) ஜனவரி 7 14 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 8.15 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 4) காலை 8 மணிக்கு துவங்குகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top