Close
நவம்பர் 22, 2024 4:52 காலை

தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து ஜன.24 -ல் தஞ்சை மாவட்டத்தில் மூன்று மையங்களில் மறியல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற ஏ ஐ டி யூ சி தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் மூன்று மையங்களில் ஜனவரி 24 ம் தேதி மாநிலந்தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென  ஏஐ டியூசி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சை மாவட்ட சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமை வைத்தார். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அகில இந்திய, மாநில குழு முடிவுகள் பற்றி விரிவாக பேசினார்.

மாவட்ட செயலாளரும், மாநிலச் செயலாளருமான ஆர்.தில்லைவனம் நடைபெற்ற வேலைகள் பற்றி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன் மாவட்ட துணை செயலாளர்கள் துரை.மதிவாணன்.

இரா.செந்தில்நாதன், ஆர்.பி.முத்துக்குமரன், காளிதாஸ் , துணைத் தலைவர்கள் அ.சாமிக்கண்ணு, ஜி.மணிமூர்த்தி, பரிமளா, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் மின்வாரிய சம்மேளனத்தின் மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல், மாவட்ட நிர்வாகி சி..தண்டபாணி.

ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் என். செழியன் , நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாவட்ட பொருளாளர் எஸ். தியாகராஜன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் பி.செல்வம் உள்ளிட்டோர் பக்கேற்றனர்.

கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத , தொழிலாளர் விரோத கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. போராடி பெற்ற தொழிற்சங்க, தொழிலாளர் நல சட்டங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள் நான்காக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் , 240 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவும், அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 21,000 நிர்ணயம் செய்யவும் , ஓய்வூதியம் மாதம் ரூ. 6000 -ம் வழங்கவும்.

நலவாரிய செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் , நிதிபலன் களை அதிகரிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற  24.1.2023 -ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்தை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை , கும்பகோணம் ஆகிய மூன்று மையங்களில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அனைத்து தொழிலாளர்களும் மறியல் போராட்டத்தில் பெருவாரியாக பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top