Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

கடலூரில் கல்வித் துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்க  முப்பெரும் விழா

கடலூர்

கல்வித் துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்கம்  கடலூரில் முப்பெரும் விழா

கடலூரில் கல்வித் துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்க   முப்பெரும் விழா நடைபெற்றது.

கல்வித் துறை ஓய்வுபெற்ற அமைச்சுப் பணியாளர்கள் நலச்சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அமரர் ப.விஸ்வநாதன். மாநிலப் பொருளாளர் அமரர் ந.சிவானந்தம் ஆகியோரின் உருவப்படத் திறப்புவிழா ஓய்வூதியர் தினவிழா மாநில நிர்வாகிகள் தேர்தல் ஆகிய முப்பெரும் விழா, மாநில துணைத் தலைவர் வ.பாலகிருஷ்ணன் தலைமையில் (7.1.2023)  கடலூர் நகராட்சிப் பள்ளியில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் அ.ஜனார்தனம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அமரர் ப.விஸ்வநாதன், மாநிலப் பொருளாளர் அமரர் ந.சிவானந்தம் ஆகியோரின் உருவப் படங்களைத் திறந்து வைத்து உறுப்பினர்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். கடந்த மாநில பொதுக் குழு கூட்டத்திற்குப் பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

கடலூர். தலைவர் பா.செல்வம் – துணைத் தலைவர்கள் சென்னை வ.பாலகிருஷ்ணன்  கடலூர் எஸ்.கே.இராமலிங்கம். மதுரை ச.பத்மநாபன். பொதுச் செயலாளர் புதுக்கோட்டை அ.ஜனார்தனம் .

இணைச் செயலாளர்கள் அரியலூர் எஸ். தங்கராஜ். மதுரை ந.ராமச்சந்திரன்.  காரைக்குடி இரா.கருப்பையா. மாநிலப் பொருளாளர் விழுப்புரம் இரா.பாலசுப்ரமணியன். மாநில பிரச்சாரச் செயலாளர், மதுரை சௌ.பார்த்தசாரதி.  மாநில அமைப்புச் செயலாளர் கடலூர் தங்க.இராஜேந்திரன்.

மாநில செயற்குழு உறுப்பினர்கள்: 

இராமநாதபுரம் கே.சந்தானகிருஷ்ணன். கடலூர் எஸ்.புருஷோத்தமன், சென்னை எம்.கே.ஷாகுல் அமீது, விருதுநகர்ச.நைனாமுகமது. திண்டுக்கல் வே.ராஜரெத்தினம்.  புதுக்கோட்டைக.கோவிந்தராஜன். விழுப்புரம் ஜி.சந்திரசே கரன். தஞ்சாவூர் ப.முனுசாமி. மதுரை டி.விஜயராஜன்.  மயிலாடுதுறை ஆ.ஜெயபாலன்.திருச்சி நாக.ராஜாங்கம், ஆர்.செல்வராஜ்.

விழாவில்,  ச.பத்மநாபன்,  பா.செல்வம், கடலூர் கார்மேக வண்ணன், மருத்துவர் வி.பிரசாந்த், எம்.கே.ஷாஹுல் அமீது, தங்க.ராஜேந்திரன், எஸ்.கே.திருநாவுக்கரசு, தங்கராஜ். தாகூர், தேவமுரளி,   புருஷோத்தமன்,  ஆ.ஜெயபாலன்,  டி.விஜயராஜன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளர் தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திட்டக்குடி இ.ஜி.இராமசாமி புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும். இன்றைய நிலையில் ஓய்வூதியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள சலுகை களை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும்.

ஓய்வூதியர்களுக்கான பலன்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைப் பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்து, இத்திட்டத்தினை எளிமைப் படுத்திட தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  புதிய நிர்வாகிகள் சார்பாக புதிய மாநிலத் தலைவர் பா.செல்வம் ஏற்புரை வழங்கினார். மாநிலப் பொருளாளர் இரா.பாலசுப்ரமணியன் நன்றி தெரிவித்தார்.
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

01.01.2023 முதல் தற்போது அறிவிக்கப்பட்ட அகவிலைப் படி உயர்வை 1.7.2022 முதல் வழங்கியும் 1.1.2023 முதல் மத்திய அரசு அறிவிக்க உள்ள அகவிலைப்படி உயர்வை 1.1.2023 அன்றே மாநில அரசும் அறிவிக்க வேண்டும்.

புதிய காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து காசில்லா மருத்துவக் காப்பீட்டைப் பெறும் வகையில் காப்பீட்டு நிறுவங்களுக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

சென்னை பெரு நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச போக்கு வரத்துச் சலுகை திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசில் நடைமுறையில் இருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9000 -ஐ தமிழக ஓய்வூதியர்களுக்கும் அறிமுகப் படுத்த வேண்டும்.

புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் மாநில சங்கத்திற்கென மாநிலத் தலைவர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோரின் பதவிப் பெயரில் புதிய இணை வங்கிக் கணக்கு தொடங்கிட மாநிலத் தலைவர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குவது.

அமரர் முன்னாள் மாநிலத் தலைவர் ப.விஸ்வநாதன் மற்றும் அமரர் மாநிலப் பொருளாளர் ந.சிவானந்தம் ஆகியோரின் பதவிப் பெயரில் வங்கியில் செயல்படும் கணக்கினை முடித்து சங்கத்தின் புதிய வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்ய அனுமதிப்பது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top