Close
நவம்பர் 22, 2024 11:49 காலை

ஜன.24 ல் நடைபெறும் மாநிலம் தழுவிய மறியலில் முழு அளவில் பங்கேற்பதென ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் தீர்மானம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்

தொழிலாளர் விரோத ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து ஜனவரி 24-இல் நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பதென  கட்டுமான சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் இன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் தலைவர் ரெ. சேகர். தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார்.சங்க நிர்வாகிகள் ஜி. சுகுமாரன், வெ.சேவையா, மு. இராமையன், ப. செல்வராஜ், இசக்கி அம்மாள் மற்றும் பண்ணை சங்க பொதுச்செயலாளர் உ.அரசப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக போராடிப்பெற்ற தொழிலாளர் சட்டங்கள், தொழிற்சங்க சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதை, சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்,

கட்டுமானம் உள்ளிட்ட நலவாரிய நிதிகளை அதிகப்படுத்து வது. இந்தக்  கோரிக்கைகளை முன் வைத்து ஏஐடியூசி தமிழ் மாநில குழுவின் முடிவுப்படி வருகிற ஜனவரி 24 -ஆம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான சங்க தொழிலாளர்கள் முழு அளவில்  பங்கேற்று வெற்றி பெறச்செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top