Close
நவம்பர் 21, 2024 2:12 மணி

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழா போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் இணைந்து பொங்கலிட்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  கிராமிய கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு, கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றார்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவில், கிராமிய கலைஞர்கள் மூலமாக தப்பாட்டம், சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள், நாதஸ்வரம், தவிலிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இக்கலைநிகழ்ச்சிகளில் வருவாய்த்துறையில் பணியாற்றும் பணியாளர் நடனமாடினார்.

அதனைத்தொடர்ந்து, கோலப்போட்டி, உறியடித்தல் (ஆண்-பெண்), பாட்டில் தண்ணீர் நிரப்புதல், லெமன்-ஸ்பூன் லிங்க், கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை காண்பித்தனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு  பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), சுற்றுலா அலுவலர் முத்துசாமி, பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top