Close
நவம்பர் 21, 2024 6:48 மணி

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்

புதுக்கோட்டை

புதுகை சாந்தநாதர் கோயிலருகே விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் கொத்து

புதுக்கோட்டை நகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை  ஞாயிற்றுக் கிழமை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான சனிக்கிழமை போகி பண்டிகை ஆகும். பழையன கழித்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.

இதனையொட்டி  புதுக்கோட்டை நகரில் உள்ள  உழவர் சந்தை, பெரியமார்க்கெட், சாந்தநாதர் கோயில் சந்நிதி வீதி, பழைய பேருந்துநிலையம், பெருமாள் கோயில் மார்க்கெட், திலகர்திடல் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கிராமப் புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியைவ அடங்கிய பொங்கல் பூ காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுகளாக கட்டி வியாபாரிகள் சாலையேரம் வைத்து  விற்பனை செய்தனர்.

இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டுகள் ரூ.10-க்கும் விற்பனை செய்தனர். மேலும்,  சாந்தநாதர் சந்நிதியில் உள்ள ஜிடிஎன். பூஜை பொருள்கள் விற்பனை நிலையத்தில்  பல வண்ண கோலப்பொடிகளையும் மக்கள் வாங்கிச்சென்றனர்.

புதுக்கோட்டை
புதுகை சாந்தநாதர் சந்நிதி அருகேயுள்ள ஜிடிஎன் பூஜை பொருள் விற்பனை நிலையம்

மேலும் பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் வைப்பதை தமிழர்கள் இன்றுவரை வழக்கமாக கொண்டுள் ளனர். பொங்கல் வைக்கும் போது பொங்கல் பானைக்கு அருகில் மஞ்சள் கொத்து கரும்பு, பழம் உள்ளிட்ட பொருட்க ளையும் வைப்பார்கள்.

இதற்காக புதுக்கோட்டை நகரில் திலகர்திடல், டிவிஎஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்து மற்றும் கரும்பு விற்பனைக்காக வைக்கப் பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் கீழராஜவீதி, மேலராஜ வீதி, வடக்குராஜ வீதியில்  உள்ள ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top