Close
நவம்பர் 21, 2024 11:42 மணி

பொங்கல் விழா… களை கட்டிய பித்தளை செப்பு பாத்திரங்கள் விற்பனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள கவிதா மெட்டல் கடையில் விற்பனைக்கு குவிந்துள்ள பித்தளை செப்பு பானைகள்

புதுக்கோட்டையில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெண்கலபானை,  செம்பு, பித்தளை  பானை, பித்தளை பாத்திரங்களை  பொதுமக்கள்  ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

புதுக்கோட்டையில் செம்பு, பித்தளை பாத்திரங்கள்,  வெண்கல பானைகளை  பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் ஜனவரி 15 -ஆம்  தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டவில்லை. இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் .  பொங்கல் விழா கொண்டாட்டங்கள்  களைகட்டியுள்ளன.   .

15-ஆம் தேதி  பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி  மாட்டு பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம், 17 -ஆம் தேதி (செவ்வாய்கிழமை) உழவர் திருநாள் என்று  வரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையொட்டி புதுமண தம்பதியருக்கு தலைப்பொங்கல் சீர்வரிசை வழங்கும் வழக்கம்  இருந்து வருகிறது.  இதில் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள், தங்க நகைகள், சீர்வரிசை பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் பண்டிகை கொண்டாட குத்துவிளக்கு, செம்பு பானை, உருண்டை பானை, நாழி, உழக்கு, குத்துப்போணி, பூஜை பொருட்களான மணி, , காமாட்சி விளக்கு, தூபக்கால் போன்றவற்றையும், கரும்பு, மஞ்சள், வாழைத்தார் போன்றவற்றையும் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் புதுக்கோட்டை  பாத்திரக்கடைகளில் செம்பு பானை கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பித்தளை பானைகள் கிலோ ரூ.600 வரையிலும், விளக்கு ரூ.750 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து தெற்கு 4 -ஆம் வீதியிலுள்ள  ஸ்ரீ கவிதா மெட்டல் நிர்வாகி ஆர்.முருகேசன் கூறுகையில், சென்ற வருடத்தைவிட பித்தளை  பாத்திர வகைகள் விலை குறைந்துள்ளது. தற்போது பித்தளை  பாத்திரங்கள் 1 கிலோ ரூபாய் 600 -க்கு விற்பனை செய்கின்றோம்.

பாத்திர வகைகள், கும்பகோணம், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வந்து குவிந்துள்ளன. சில்வரில்   வர்ணம் பூசப்பட்டவை 1 கிலோ ரூபாய் 300 க்கும் விற்பனை செய்கின்றோம்.

 மேலும் உள்ளூரிலும் பாத்திர வகைகள் தயார் செய்யப்பட்டு அதுவும் விற்பனையில்  உள்ளது . இதனை போன்று எவர்சில்வர் பாத்திர வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பொங்கல் சீர்வரிசை பாத்திர வகைகளை வாங்கிட மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால் பாத்திர கடைகளில் மக்கள்  கூட்டம் அதிகரித்துள்ளது.

மக்கள் குடும்பம், குடும்பமாக வருகை தந்து பாத்திர வகைகளை வாங்கி செல்கின்றனர். பாத்திர கடைகளில் சிலவற்றில் பொங்கல் பாத்திர வகைகள் செட் மொத்தமாக விலை நிர்ணயம் செய்தும் விற்பனை நடைபெறுகிறது என்றார் அவர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top