Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி… 438 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே முக்காணிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது

முக்காணிப்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன்  துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன்  வியாழக்கிழமை (19.01.2023) துவக்கி வைத்தார்.

இதையொட்டி அமைச்சர்  முன்னிலையில், அனைத்து மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டு உறுதிமொழியான, எங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும், பேணிக் காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும், வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் விளையாடுவோம் என்றும் உளமாற உறுதிமொழி கூறுகிறோம் என்ற ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை, அனைத்து மாடுபிடி வீரர்களும் எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை
ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்ட இளைஞர்கள்

இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 438 காளைகளும் அதேபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர் வாடி வாசலில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகளும் மற்றும் அண்டா பேன் கட்டில் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கப்பட்டன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகள் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி அரசு விதிமுறைகளின்படியும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்பட்டது.

மேலும் இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுத் தலைவர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் முனைவர் எஸ்.கே.மிட்டல்,  ஜல்லிக்கட்டுப் போட்டியினை நேரில் பார்வையிட்டு, அரசு விதிமுறைகளின்படி போட்டி நடைபெறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு துளிகள்… இதில் 20  காளைகளை மாத்தூர் கவாஸ் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுத்து இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது.  சிறந்த காளையாக  காவல் உதவி ஆய்வாளர் அனுராதாவின் காளை தேர்வு செய்யப்பட்டு  பிரிட்ஜ் ஒன்று  பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top