புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவில் இயக்க அலுவலகத்தில் துளிர் திறனறிவுத்தேர்விற்கான பதாகைகள் மற்றும் துண்டறிக்கை வெளியிடப்பட்டன.
மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கவிஞர் ஜீவி, எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கமலாலயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம்.வீரமுத்து தலைமை வகித்து பேசியதாவது:
துளிர் திறனறிவுத் தேர்வு என்பது மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவில் இயக்கம் தமிழில் துளிர் இதழையும், ஆங்கிலத்தில் ஜந்தர், மந்தர் இதழையும் நடத்தி வருகிறது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வினை நடத்தி இருக்கிறது.பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையிலும் நடைபெற்று வரும் தேர்வில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்க மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
6 முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற துளிர் திறனறிவுத்தேர்வில் கடந்த 2019 முதல் 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு நடைபெற்றது. துவக்க நிலை மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் புதிய அனுபவத் தையும் தரும் வகையில் இத்தேர்வு அமைந்தது.இந்த வருடமும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டு சான்றிதழ், அறிவியல் வெளியீட்டு நூல்கள் குழந்தை அறிவியல் இதழ்கள் வழங்கப்படும் .
மாவட்டத்தில் சிறப்பிடம் பெரும் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்வுகள், விஞ்ஞானிகளுடன் சந்திப்பு மற்றும் பாராட்டு பரிசுகள் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன், மாநில துணைத் தலைவர் மாணிக்கதாய், கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, கரம்பக்குடி வட்டார செயலாளர் சாமி கிரீஷ்,கோபால்பட்டினம் முதுகலை ஆசிரியர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.