தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை (Food safety on wheels) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் .
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும். தரமான கலப்படமற்ற பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக 12 -1 -2023 அன்று தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப் பட்டுள்ள உணவு பாதுகாப்பு துறையின் ஆறு உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நடமாடும் உணவு பகுப்பாய்வு வகானம் (Food safety on wheels) இன்றுமுதல் 7 நாட்கள் நமது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் உணவு பாதுகாப்பு துறையில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகளில் (Food SAMPLE) 569 – உணவு மாதிரிகள் தரமற்ற உணவு மாதிரிகளாக அதாவது லேபில் குறைபாடு தரம் குறைந்த பாதுகாப்பற்ற மற்றும் தடை,செய்யப்பட்ட தீங்கு விளைவிக்க கூடிய உணவுப் பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநடமாடும் உணவு ஆய்வகம் தமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் உள்ள உணவுப் பொருட்களின் தரம் அதில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிந்து அதுகுறித்து நமது மாவட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்த நடமாடும் உணவு ஆய்வகத்தில் குடிநீர் பால்,சமையல் எண்ளொய் பருப்பு வகைகள்; இனிப்பு.காரஉணவு வகைகள் மற்றும் இதர மளிகை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட் களின் தரத்தினை உடனடியாக ஆய்வுசெய்வதற்கு ஏற்ப ஸ்பாட் டெஸ்ட் (SPOT TEST) உபகரணங்கள் வழங்கப்பட்டுள் ளன.
அதில் கண்டறிந்த தரமற்ற உணவு மாதிரிகளின் தன்மை உறுதி செய்ய சட்டம் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படும். கலப்படம் அல்லது தரம் குறைவு என கண்டறியப்படும் உணவு மாதிரிகள் மீது சட்டப் பூர்வ மானநடவடிகைகள் எடுக்கப்படும்.
தரம் குறைந்த மற்றும் கலப்படம் உள்ள உணவுப் பொருட்கள் லேபில் குறைபாடு உள்ள மற்றும் தடைசெய்யப்பட்ட உணவு மாதிரிகள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் அரசுக்கு 64.22.500 -ரூபாய் வருவாய் ஈட்டி தரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாணவ மாணவியர், சுய உதவி குழுவினர், உணவு பொருள் உற்பத்தியாளர்கள். உணவு பொருள் விற்பனையாளர்கள் நுகரவோர் நல அமைப்பினர் அனை வரும் இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்தினை பயன் படுத்தி விழிப்புணார்வு ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் வியாபா ரிகள் விற்பனை செய்யக்கூடிய உணவுப் பொருட்களின் தரங்கள் கண்டறிந்து பாதுகாப்பான உணவு என என்பதை தெரிந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வருவாய் என். ஓ. சுகபுத்ரா, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சித்ரா, உணவு பகுப்பாய்வாளர் சொர்ணலதா, நுண்ணுயி ரியல் ஆய்வாளர் மீனா, கண்காணிப்பாளர் வல்லவரசு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.