Close
செப்டம்பர் 19, 2024 11:18 மணி

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல்

தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக  தமிழ்நாட்டில் உயர்நீத்த மொழிப்போர் தியாகிகளின்  நினைவேந்தல் நிகழ்ச்சி (25.1.2023) இன்று நடைபெற்றது.

 தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் சாம்பான் தலைமை வகித்தார்.

நிகழ்வில், தமிழை, தமிழ் வழிக் கல்வியை அழிக்கின்ற இந்து மற்றும் சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம், குழந்தைகள் முதல் கடைகள், சாலைகள் வரை தமிழில் பெயர் வைப்போம்.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயே படிப்போம், மருத்துவம் மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, அலுவல் மொழி, உயர் நீதிமன் றத்தின் வழக்காடு மொழி தமிழ் மொழியாக நடைமுறைப் படுத்த வேண்டும், தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாசாரத்தை, தாய்மொழித் தமிழை உயர்த்தி பிடிப்போம் என்ற கொள்கை களை நிறைவேற்ற பாடுபடுவோம்  உறுதியேற்க்கப்பட்டது.

 இதில், இடதுசாரிகள் பொதுமடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, ‌ தமிழ் தேச மக்கள் முன்னணி மாநகர செயலாளர் ஆலம்கான்.

அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் எஸ்.தாமரைச் செல்வன்,  டி. தங்கராசு, டி.கஸ்தூரி, மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன். தங்கவேல், கட்டுமான சங்க நிர்வாகிகள் எஸ்.குணசேகரன், பி.செல்வம்.

நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், நாடிமுத்து,பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வா கிகள் எம்.சிவானந்தம்,. ஆர்.பழனி மாணிக்கம், விஜயகுமார், சமூக ஆர்வலர்கள் விசிறி சாமியார் முருகன், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வரலாறு…

இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடந்த 1965 -ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. பல உயிர்களை பலி கொண்ட அந்தப் போராட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி திமுக அரியணை ஏற இந்தப் போராட்டம் திருப்புமுனையாக அமைந்தது.

1965 ஜனவரி 25 -ஆம் தேதி திமுக சார்பில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. அன்று நடைபெற்ற போராட்டம் கடுமையாகத் தீவிரமடைந்தது. அடுத்தடுத்த நாட்களில் போராளிகள் மொழிக்காகத் தீக்குளித்து மாண்டனர். இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

மத்திய அரசு மொழித் திணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதெல்லாம் மொழிப்போரே நினைவு கூரப்படுகிறது. குறிப்பாக, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு வடிவங்களில் மொழித் திணிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இப்படியான சூழலில் மொழிப்போர் ஈகியர்களின் தியாகத்தைப் போற்றுவதிலும், தமிழ் மொழியைக் காப்பதிலும் தமிழ்நாடு உறுதியாக இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top