ஜன.29, ” இந்திய பத்திரிகை தினம்“. “இந்திய இதழியழின் தந்தை” என்றழைக்கப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் “பெங்கால் கெஜட்” (Bengal Gazette or Calcutta General advertiser) என்ற முதல் இந்திய(ஆங்கில) பத்திரிக்கையை வெளியிட்டார்.
இந்த நாள் இந்தியப் பத்திரிக்கை தினமாகக் கொண்டாடப் படுகிறது. இது ஒரு வாரப்பத்திரிக்கை. இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை இது. அன்று தொடங்கிய பத்திரிக்கை துறை இன்று பெறும் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
இத்தகு சிறப்புடைய நாளான புதுக்கோட்டை (29.1.2023) பேருந்து நிலையத்தில் அதிகாலை, இந்திய பத்திரிகை தினத்தை கொண்டாடும் விதத்தில், தினந்தோறும் வாசிப்பிற்கு தூண்டுகோளாக இருக்கும் வீடு வீடாக பத்திரிகை போடும் நண்பர்களையும், முகவர்களையும் வாசகர் பேரவை அங்கத்தினர்களும், மரம் நண்பர்களும் சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்வில் வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், உறுப்பினர் ஜெ.ஜெ.கல்லூரி பேராசிரியர்தயாநிதி, மரம் நண்பர்கள் செயலர் பழனியப்பாகண்ணன், உறுப்பினர்கள் பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, பிரகாஷ், மற்றும் மன்னர் கல்லூரி போராசிரியர் கருப்பையா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.